ஜெயங்கொண்டம் ஊழல் தடுப்பு இயக்கங்களில் மக்கள் பங்கேற்க வேண்டும்: மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை

 

ஜெயங்கொண்டம், டிச. 6: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மையத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் ஆய்வாளர் கவிதா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊழல் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக உள்ளது என்றும், அரசு தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் வருங்கால அரசு மாணவ மாணவியர்களிடையே அதிகாரிகளாகவோ, அலுவலர்களாகவோ பணியாற்ற கூடும் என்றும், ஊழலை வருங்கால தலைமுறைகளாகிய உங்களால்தான் அறவே ஒழித்திட முடியும் என்றும் வலியுறுத்தனார். மேலும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான காணொளியை அவர் வௌியிட்டார்.

Related Stories: