கரூர், டிச. 6: கரூரில் ஆளுநரை கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
தமிழ்நாட்டில் பயங்கரவாதம் குறித்து குறிப்பிட்டு தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்கை கண்டித்து திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
