சீர்காழி, டிச.6: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை வகித்தார். தாசில்தார் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் இளவரசு வரவேற்றுப் பேசினார்.
வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் புதிய ஏ.எஸ்.டி.டி. படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கு வழங்கி பேசுகையில், அந்தந்த பகுதியில் உள்ள முகவர்கள் அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தை சரி பார்த்து இறந்தவர்கள். இடம் மாறிச் சென்றவர்கள், வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பெயர் உள்ளவர்கள் உள்ளிட்ட விவரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
