நீடாமங்கலம்,டிச.6: நீடாமங்கலம் அஞ்சலகத்தில் இயந்திர கோளாறை சீர்செய்து ஆதார் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு உதவிட பொதுமக்கள் சார்பில் பல்நோக்கு சேவை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இயக்க தலைவர் பத்மராமன், கவுரவத் தலைவர் சந்தானராமன் ஆகியோர் நீடாமங்கலம் துணை அஞ்சல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
