செம்பனார்கோயில், டிச.6: செம்பனார்கோயில் பகுதி கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டிசம்பர் மாதம் பிறந்ததுமே கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம்.
இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தை பின்பற்றி கிழக்கிந்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது ஸ்டார்கள் இடம் பெறுகின்றன என்றும், இயேசு கிறிஸ்து அவதரித்ததையும் உலகிற்கு உணர்த்த ஒரு பிரகாசமான ஒளியாக நட்சத்திரம் தோன்றியது என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் 16ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களின் போது ஸ்டார்களைக் கொண்டு அலங்கரித்து வருவதாக கூறப்படுகிறது.
