சாத்தூர், டிச. 6: சாத்தூர் சிதம்பரம் நகரை சேரந்தவர் ராஜேஸ்வரி (49). இவர் வாகனங்களுக்கு டிங்கரிங், பெயிண்டிங் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் நிறுத்தப்பட்டு இருந்த சேதுராமலிங்காபுரத்தை சேர்ந்த வைரபிரகாஷ் (25) என்பவரது கார் திருடு போனது. இதுகுறித்து ராஜேஸ்வரி சாத்தூர் நகர் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சியை ஆய்வு செய்தனர். இதில் காரை திருடி சென்றது சிந்தப்பள்ளியை சேர்ந்த லோடு மேன் சக்திவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
