போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்: நாளை முதல் பார்வையிடலாம்

 

மதுரை, டிச. 6: மதுரையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ேபாலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.22 மற்றும் டிச.23ல் ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நாளை (டிச.7) முதல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (என்ஐபி) அலுவலகங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குளில் பறிமுதலான 30 இரண்டு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் என மொத்தம் 72 வாகனங்கள் உள்ளன. அவற்றில் 48 வாகனங்கள் டிச.22ம் தேதி காலை 11 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் டிச.23ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: