சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ம் தேதி (வெள்ளி) ஆகும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இதையடுத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் டிசம்பர் 5ம் தேதி ஆங்காங்கே ஜெயலலிதா உருவபடங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
