கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவங்கள்

கரூர், ஜன.11: கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவங்களுக்கு தீர்வு காண மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்தோ அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறி வைத்து, அவர்களை பின்தொடர்ந்து கழுத்தில் கிடக்கும் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவம் மாவட்ட பகுதிகளில் பரவலாக நடைபெற்று வருகிறது.இது போன்ற நிகழ்வுகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிகளவு நடைபெற்றுள்ளன. எனவே, மாவட்ட காவல்துறை நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், தனியாக செல்லும் பெண்களும், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறை மற்றும் விழிப்புணர்வு அறிவுரைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: