பனாஜி: செஸ் உலகக் கோப்பை செமிபைனல் டைபிரேக்கர் போட்டிகள் நேற்று நடந்தன. ஒரு போட்டியில், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோஹிர் சின்டாரோவ், சக நாட்டு வீரர் நோடிர்பெக் யாகுப்போவை, 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில், சீன கிராண்ட் மாஸ்டர் வெ யி, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் ஆந்த்ரே எஸிபென்கோவை 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, ஜவோஹிர் சின்டாரோவ் – வெ யி இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர். இதன் மூலம், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் ஆடுவதற்கான வாய்ப்புகளையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர்.
