எஸ்ஐஆர் தொடர்பாக ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு மையம்

காங்கயம், நவ. 15: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் 2025 சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கிட்டு படிவங்களை, பூர்த்தி செய்து வழங்க வசதியாக தாங்கள் வாக்களிக்கும் ஓட்டுச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர், பிஎல்ஓ தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, வாக்காளர்கள் இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, சந்தேகங்களை தெளிவுபடுத்தி படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.  இந்த வாய்ப்பினை, அனைத்து பொதுமக்களும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என காங்கயம் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: