புதுடெல்லி: தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புகளை மீறி உள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் , தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,\\” இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
புதிய டிஜிபி நியமனம் விவகாரம் தமிழ்நாடு அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- தமிழ்நாடு அரசு
- டிஜிபி
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தமிழ்நாடு காவல்துறை
- சங்கர் ஜிவால்
- வெங்கட்ராமன்
- தமிழ்
- தமிழ்நாடு
- பிரகாஷ்...
