ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை, நவ. 5: உடுமலை அருகே ராகல்பாவியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக ராகல்பாவியில் இருந்து பூலாங்கிணறு, ஆர்.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மாற்றுப்பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கி உள்ளதால் பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Related Stories: