சென்னை: எடப்பாடி பழனிசாமி தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவது அவரது அரசியலுக்கு உகந்தது இல்லை என்று திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில், உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். அந்த பொறுப்பின் அடிப்படையில், அவருடை அனுபவத்தின் அடிப்படையில், சமூகத்தில் நல்ல மதிப்பு அவருக்கு இருக்கிறது. அவர் தனி நபர் விமர்சனம் செய்வது, அதிர்ச்சியாக இருக்கிறது. இது அவருக்கும், அவருடைய அரசியலுக்கும் உகந்தது இல்லை.
எடப்பாடியின் பேச்சு அரசியலுக்கு உகந்தது அல்ல: திருமாவளவன் பேட்டி
- எடப்பாடி
- திருமாவளவன்
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை விமான நிலையம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
