டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிப்பு..!!

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், ரயில் பெட்டிகளுக்குள் சாப்பிடுவதற்கும் மெட்ரோ நிர்வாகம் தடை விதித்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரயிலில் சில நேரங்களில் சர்ச்சையான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு முறை அரை நிர்வாண உடையில் வந்த ஆண் பயணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் தனது நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்காக எழுந்தார். அனைவரது பார்வையும் அவர் மீதுதான் இருந்தது. இதையடுத்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் டீசன்ட்டான ஆடைகளை பயணிகள் அணிந்து வருமாறு கேட்டுக் கொண்டது. மேலும், டெல்லி மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்கக் கூடாது , ரீல்ஸ் செய்யக் கூடாது என்றும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் பொதுமக்கள் இத்தகைய செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி மெட்ரோ நிர்வாகம் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளது. அதில், ரயில்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. ரயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், ரயில் பெட்டிகளுக்குள் சாப்பிடுவது, கீழே உட்காருவது உள்ளிட்டவைகளுக்குத் தடை விதித்தது.

Related Stories: