வாக்குறுதிகளை நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

சென்னை: தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விடியல் எங்கே என்ற பெயரில் புத்தகத்தை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இதில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதம் செய்ய நான் தயார். தற்போது பாமக வெளியிட்டுள்ள புத்தகம் தமிழ்நாடு நலனுக்காக தான். எனவே தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 6 மாதம் உள்ளது. இனி வருங்காலங்களில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றம் செய்ய வேண்டும்.

Related Stories: