மின்சார ஊழல் வழக்கு 27 ஆண்டுகளுக்கு பின்னர் கோவா அமைச்சர் விடுதலை

பனாஜி: கடந்த 1998 ஆம் ஆண்டு மின்சார ஊழல் வழக்கில் கோவா அமைச்சர் மவுவின் கோடின்ஹோ விடுதலை செய்யப்பட்டார். கோவாவில் பா.ஜ அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருப்பவர் மவுவின் கோடின்ஹோ. கடந்த 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது தொழில்துறை பிரிவுகளுக்கு மின் கட்டண தள்ளுபடி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் மாநில கருவூலத்திற்கு ரூ.4.52 கோடி இழப்பு ஏற்பட்டது என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மனோகர் பாரிக்கர் இந்த வழக்கை அம்பலப்படுத்தி கோடின்ஹோவுக்கு எதிராக புகார் அளித்தார். கடந்த 27 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கோவா சிறப்பு நீதிமன்ற நீதிபதி இர்ஷாத் ஆகா, அமைச்சர் கோடின்ஹோவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories: