பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பதிவு தேஜஸ்வி மீது 2 வழக்கு

ஷாஜஹான்பூர்: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி குறித்து, ‘வாக்கு திருடன் பீகார் வருவார். கயாவிற்கு வருவார், பீகார் மக்களுக்கு முன் பொய்க்கு பொய் கூறுவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக பீகார் நகர தலைவர் ஷில்பி குப்தா சதர் பஜார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேஜஸ்வி யாதவ் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் உள்ளூர் எம்எல்ஏ மிலிந்த் நரோட் புகாரின்பேரில் போலீசார் யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* உண்மையை தொடர்ந்து பேசுவேன்
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘யார் வழக்குக்கு பயப்படுகிறார்கள்? ஜூம்லா(வெற்று வாக்குறுதி) என்பது ஆட்சேபனைக்குரிய வார்த்தையா? நான் உண்மையை சொல்லிக்கொண்டு இருந்தேன். நான் அதை தொடர்ந்து செய்வேன். அவர்கள் என் மீது எத்தனை வழக்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்”என்றார்.

Related Stories: