குவைத்திலிருந்து சென்னை வந்தபோது நடுவானில் புகை பிடித்து பயணிகளிடம் ரகளை: தஞ்சை வாலிபர் கைது

 

சென்னை: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் 144 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 150 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது, தஞ்சாவூரை சேர்ந்த சேக் முகமது (28) என்ற பயணி கழிவறைக்கு சென்று புகை பிடித்தது குறித்து பயணிகள் விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். இதனால் அவர் ரகளையில் ஈடுபட்டார்.சென்னையில் விமானம் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சேக் முகமதுவை விமானத்திலிருந்து கீழே இறக்கி, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை நடத்தி முடித்தனர்.

பிறகு இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிந்து அவரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சேக் முகமது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் குவைத்தில் டிரைவராக உள்ளார். இப்பொழுது விடுமுறையில் சொந்த ஊர் வந்தது தெரிய வந்தது.

Related Stories: