சென்னை: தமிழ்நாட்டில் NEP- ஐ நுழைய விடாமல் தடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்வி கொள்கை. ரூ.10,000 கோடி தந்தாலும் NEP-ஐ ஏற்க மாட்டோம் என கூறியவர் முதலமைச்சர்”,இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் NEP- ஐ நுழைய விடாமல் தடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- NEP
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- சென்னை
- பெரியார்
- யூனியன் அரசு
