தோகைமலையில் நடக்கவிருந்த முற்றுகை டிச. 8க்கு ஒத்திவைப்பு குளித்தலை அருகே ஹைட்ராலிக் இயந்திரம் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்து கார் நொறுங்கியது

குளித்தலை, டிச. 4: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நேற்று முழுவதும் தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை முசிறி செல்லும் வழியில் சுங்க கேட் ரவுண்டானா அருகே கரூரிலிருந்து திருச்சி செல்வதற்காக கார் ஒன்று வந்தது. அப்போது திருச்சியிலிருந்து கரூர் செல்ல ஹைட்ராலிக் இயந்திர டாரஸ் வண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டாரஸ் வண்டியிலிருந்து ஹைட்ராலிக் மேலே உயர்ந்து எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் மின் கம்பம் முறிந்து கார் மீது விழுந்து கார் நொறுங்கியது. இதனால் எதிர்திசையில் குடியிருப்பு பகுதியில் இருந்த மின் கம்பங்களில் வயர் அறுந்து விழுந்ததில் தீப்பொறி பறந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்து ஏற்படாமல் தப்பியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உடனடியாக காவல் துறைக்கும் வருவாய்த் துறைக்கும் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். அதன்பிறகு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பம், கார் அகற்றப்பட்டது. டாரஸ் வண்டி போலீசாரால் கைப்பற்றப்பட்டு குளித்தலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் டாரஸ் லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: