சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

சென்னை: சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிக்கை: கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள், மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெறலாம்.

The post சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Related Stories: