44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்கிறார்.  பின்னர், அண்ணா பல்லை பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில், பிரதமர்  நரேந்திர மோடி வரும் 28ம் தேதி வியாழன் அன்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி, சென்னை பழைய விமான நிலையத்தில் உள்ள விவிவிஐபி அறையில் மாலை 4.45லிருந்து மாலை 5.20 மணி வரை ஓய்வு எடுக்கிறார். அதன்பின்பு மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு புறப்பட்டுச் செல்கிறார். மாலை 5.50 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறிலிருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் வருகிறார். அங்கு மாலை 6 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கிவைக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு இரவு 7.35 மணிக்கு நேரு அரங்கிலிருந்து காரில் புறப்படும் பிரதமர் இரவு 7.50 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வருகிறார். இரவு பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறு நாள் வெள்ளிக்கிழமை காலை 9.55 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் செல்கிறார். காலை 10 மணியிலிருந்து காலை 11.30 மணி வரை அண்ணா பல்கலைகழகத்தில் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். காலை 11.35 மணிக்கு அண்ணா பல்கலைகழகத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர், காலை 11.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு பிரதமருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்பு காலை 11.55 மணிக்கு சென்னையில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறப்படுகிறார். பிற்பகல் 2.15 மணிக்கு அகமதாபாத் செல்கிறார்….

The post 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: