3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை: 3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2020-22-ம் ஆண்டுக்களுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். முனைவர்கள் ம.ராஜேந்திரன், க.நெடுஞ்செழியன் மற்றும் ழான் லூயிக் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விருது வழங்கும் விழா நடைபெருக்கிறது. பின்னர் அதில் முனைவர் 2 பேருக்கு விருதுகள் வழங்கி, நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் உரையாற்றினார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் எனவும், இந்த நாள் சிங்கராச் சென்னையின் பிறந்த நாள் எனவும் கூறினார். ஊரெங்கும் நம்ம சென்னை நம்ம பெருமை என்று கொண்டாடப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது திமுக அரசுதான் என்றும், 3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான் என்று கூறினார். பிற மொழிகளின் உதவியின்றி தனித்து செயல்படும் ஆற்றல் கொண்டது தமிழ். அன்னை தமிழுக்காகவே வாழ்ந்தவர் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்தார். ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞர்களை கலைஞர் செம்மொழி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2010-ல் கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்த கலைஞர் பாராட்டை பெற்றவர் முனைவர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனைவர் ம.இராஜேந்திரன் கணையாழி இலக்கிய இதழின் பதிப்பாளராக விளங்கியவர். 1944-ம் ஆண்டு பிறந்த முனைவர் க.நெடுஞ்செழியன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கிய துறை தலைவராக பணியாற்றியவர். 1000 ஆண்டுக்கு மேலாக தமிழர் வாழ்வை செம்மைப்படுத்திய சமயம் ஆசிவகம் என்ற சொல்லை முன்னிறுத்தியவர் க.நெடுஞ்செழியன். அவர் 30-கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் முனைவர் க.நெடுஞ்செழியன். தமிழகத்தில் நடப்பது, தமிழின் ஆட்சி, தமிழரின் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்கிறது என்று கூறினார்….

The post 3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..! appeared first on Dinakaran.

Related Stories: