மாதவரம் –சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.299 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை பாதை அமைக்கும் பணிகளுக்கு ரூ.299.46 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவன மெட்ரோ வணிகப் பிரிவின் துணைத் தலைவர் சுனில் கட்டார் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அசோக் குமார், கூடுதல் பொது மேலாளர் குருநாத் ரெட்டி, பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் டூப்ரோ நிறுவன உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.299 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: