2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாடு அறியும் கீழடி அருங்காட்சியகத்தில் 15 நிமிட ஒளி-ஒலி காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாடு குறித்து மக்கள் அனைவரும் அறியும் வகையில், கீழடி அருங்காட்சியகத்தில் 15 நிமிட ஒளி-ஒலி காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் நிலவிய சங்க காலப் பண்பாட்டு வரலாற்று ஆய்வில், கீழடி ஒரு திருப்புமுனை. 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு மற்றும் நகர நாகரிகத்தினை வெளிச்சமிட்டு காட்டியுள்ள கீழடி அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு, வருங்கால தலைமுறையினர், மாணவ மாணவியர், அறிஞர்கள் தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் அயல்நாட்டு வல்லுநர்கள் அறியும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஓர் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி கூடம் உள்ளடக்கிய ஆறு காட்சிக்கூடங்கள் முறையே கீழடியும் வைகையும், நீரும் நிலமும், கலம்செய் கோ, நெசவுத் தொழில் மற்றும் அணிகலன்கள், கடல் வழி வணிகம், வாழ்வும் வளமும் என்ற தலைப்பில் மேற்கூறிய அனைத்து அம்சங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு, கண்காட்சி மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொழில்நுட்பக் கூறுகளையும் பார்வையிட்டு, பல இடங்களில் தனது கைபேசியில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதுவரை, வார நாட்களில் சுமார் 2000 பார்வையாளர்களும், வார விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட 5000 பார்வையாளர்களும் இவ்வருங்காட்சியகத்தைக் கண்டுகளித்துள்ளனர்.

  1. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள தொல்லியல் தளங்கள் (அகரம், கொந்தகை), சிவகங்கை மாவட்டம் – ஒன்பதாம் கட்டம்
  2. கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்- மூன்றாம் கட்டம்
  3. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – இரண்டாம் கட்டம்
  4. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – இரண்டாம் கட்டம்
  5. கீழ்நமண்டி திருவண்ணாமலை மாவட்டம் – முதல் கட்டம்
  6. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – முதல் கட்டம்
  7. பூதிநத்தம், தருமபுரி மாவட்டம் – முதல் கட்டம்
  8. பட்டறைப்பெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் – மூன்றாம் கட்டம்.

இந்த நிகழ்ச்சியில்,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு மற்றும் நகர நாகரிகத்தினை வெளிச்சமிட்டு கீழடி அகழாய்வு காட்டியுள்ளது.

The post 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாடு அறியும் கீழடி அருங்காட்சியகத்தில் 15 நிமிட ஒளி-ஒலி காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: