பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வில் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10மணிக்கு தொடங்க உள்ளது. இந்த தேர்வு 20ம் தேதி வரை நடக்கும். தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12639 பள்ளிகளில் படிக்கின்ற 9லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் எழுத பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரியில் 15 ஆயிரத்து 566 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக மொத்தம் 37 ஆயிரத்து 798 பேர் எழுதுகின்றனர். மாற்றுப் பாலினத்தவர்கள் 5 பேர் எழுதுகின்றனர். சிறைவாசிகள் 264 பேரும், மாற்றுத் திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்காக தமிழ்நாட்டில் மொத்தம் 3976 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள்அமைக்கப்பட்டு அதில் 1135 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை தொடங்கும் இந்த தேர்வு காலை 10 மணி அளவில் தொடங்கும். காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடமும், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு பிறகு விடை எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்றவை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஹால்டிக்கெட்டில் தேர்வு நேரத்தில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனைகள் கிடைக்கும். தேர்வு காலை 10 மணி அளவில் தொடங்கும். காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடமும், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

The post பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: