கோவில்பட்டி செல்வமாதா தேவாலய திருவிழாவில் தேர் பவனி

கோவில்பட்டி, அக். 16: கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா தேவாலய  திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர். கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய கிளை பங்கிற்கு உட்பட்ட புதுக்கிராமம் பரிசுத்த செல்வ  மாதா தேவாலய திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடந்தது.

விழாவின் சிகரமான தேர் பவனி வெகு விமர்சையாக நடந்தது. இதை முன்னிட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ்  துரைராஜ், பாளை செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ், கோவில்பட்டி பங்குத்தந்தை காந்தி சவரிமுத்து சிறப்பு திருப்பலிகளை  நிறைவேற்றினர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி துவங்கியது. புதுகிராமம், கடலையூர்  மெயின் ரோடு, பங்களா தெரு வழியாக  சென்ற தேர் ஆலயத்தை மீண்டும் வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப்  பங்கேற்றனர்.    

Related Stories: