கண்காணிப்பு கேமரா இல்லாத போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்

கோவை, ஜூலை 24:  கோவை ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரத்தில் 36 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை ேகாவை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் போத்தனூர் ரயில் நிலையத்தில் எந்த கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்படவில்லை.  இந்த ரயில்நிலையத்தில் கஞ்சா கடத்தல், பிக்பாக்கெட் திருடர்கள், ரேஷன் அரிசி கடத்தல், வழிப்பறி சம்பவங்கள் நடந்தும் கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சிலர் ரயில்வே பிளாட்பாரத்தில் பல நாட்கள் தங்கியிருப்பதாக தெரிகிறது. சமூக விரோத கும்பல், குற்றங்களை கண்காணிக்க இங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் வழியோர ரயில் நிலையங்களான வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், மதுக்கரை ரயில் நிலையத்திலும் பிளாட்பாரங்களை கண்காணிக்கும் வகையிலான கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கவேண்டும் என பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: