ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேலும் நான்கு வார்டுகள் சேர்ப்பு

கோவை, ஜூலை 24 :  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மேலும் நான்கு வார்டுகள்  சேர்க்கப்பட்டு எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மத்திய அரசின்  ஸ்மார்ட் சிட்டி திட்டம், 14 வார்டுகளில்  செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சில பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வார்டுகளுக்குகிடையே எல்லை பிரச்னை தடையாக  இருக்கிறது. இதனால், 72, 86, 95,  99 ஆகிய நான்கு வார்டுகளை எல்லைக்குள் கொண்டு வர கோவை மாநகராட்சியால் இயக்குனரவை கூட்டத்தில் தீர்மானம்  முன்வைக்கப்பட்டது, இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இதன் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கில் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் திட்டங்கள் இனி ஸ்மார்ட்  சிட்டி நிதியில் பணிகள் மேற்கொள்ள முடியும். அதே போல் பல திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் இனி செயல்படுத்த முடியும்,’’ என்றார்.

Related Stories: