செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாடாலூர், மார்ச் 14:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் நடப்பாண்டு பங்குனி உத்திரத் திருவிழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. நேற்று காலை  கொடியேற்றம் நடைபெற்றது.  கொடியேற்றத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும், கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பக்தர்களின் அரகரோ அரகரோ கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது நிகழ்ச்சியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், பாடாலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, இரூர், சீதேவிமங்கலம், சத்திரமனை,மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறும்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யுவராஜ்., தக்கார் பாரதிராஜா, எழுத்தர் தண்டபாணி உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: