பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியின் தலைமை அலுவலகமாக மாறிவரும் டீக்கடைகள்

பெரம்பலூர், மார்ச் 14: இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வரும் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது. இத்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில், திமுக, அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் அந்தெந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூடி பேசி முடிவெடுத்து அதனை அறிவிப்பாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கிராமங்களில் உள்ள டீ கடைகளில் அனைத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் சாதக பாதகங்களை பேசு தொடங்கியுள்ளனர். கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அதிகாலையில் டீ சாப்பிட்டுக்கொடே இந்த தொகுதிக்கு இந்த வேட்பாளர் எனவும், அந்த தொகுதிக்கு அந்த வேட்பாளர் எனவும், இந்த கட்சி அங்கு தோல்வியடையும், அந்த வேட்பாளர் தோல்வியடைவார் என்று அவர்களின் விரும்பு கட்சிக்கு ஆதரவாகவும், அவர்கள் விரும்பாத கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர்.

பொதுவாக கிராமங்களில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி மற்றொரு கட்சியிலும் இருப்பார்கள். இதபோல் உறவினர்களும்  வெவ்வேறு கட்சியில் இருப்பார்கள். இதனால் டீ கடைகளில் கட்சிகளின் தேர்தல் நிலவரம், வேட்பாளர் தேர்வு குறித்து அவர்களுக்கு தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு பகையும் ஏற்படுகிறது.தேர்தல் வந்துவிட்டால் தொந்த பந்தங்களையும் தாண்டி கட்சிக்காக டீ கடைகளில் குரல்கொடுத்து வருவது தனி சுவராஷ்யம் ஏற்பட்டுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: