தேர்தல் முடியும் வரை குறைதீர் முகாம் ரத்து

பொள்ளாச்சி, மார்ச் 12:   பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, கல்வி உதவித்தொகை, நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் மனு கொடுக்கின்றனர்.

 இந்நிலையில், வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 23ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. குறைதீர் முகாம் இல்லாததால் சப்கலெக்டர் அலுவலகம் நேற்று வெறிச்சோடியது. இருப்பினும், சிலர் குறைதீர் முகாம் நடப்பதாக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்து அலுவலர்கள் மனுக்களை பெற்றுகொண்டு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “பாராளுமன்ற தேர்தல் என்பதால், வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரையிலும் மே 23ந் ேததி வரைக்கும் மக்கள் குறைதீர் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்து மே மாதம் இறுதியில் தான் மக்கள் குறைதீர் முகாம் மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக கொண்டுவரும் மனுக்களை வாங்கி கொள்ளப்படும்” என்றனர்.

Related Stories: