கூடுதல் மருத்துவ இடங்கள் தகவல் அளிக்க உத்தரவு

கோவை, மார்ச் 12: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்கள் அதிகரிப்பது குறித்த தகவலை அளிக்க நிதி ஆயோக் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் சுகாதாரத்துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கையை அளிக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் நிதி ஆயோக் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிதி ஆயோக் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில், கல்லூரிகளில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது எம்பிபிஎஸ், எம்.டி படிப்புகளுக்கு கூடுதல் இடங்களை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும். இதனால், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: