இன்ஜின் வராததால் ரயில் புறப்பட தாமதம் பயணிகள் அவதி அரக்கோணம் ரயில்நிலையத்தில்

அரக்கோணம், பிப்.12: அரக்கோணம் ரயில்நிலையத்தில் இன்ஜின் வராத நிலையில் ரயில் புறப்பட தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் அதிகாலை 5.50 மணிக்கு செங்கல்பட்டுக்கு பேசஞ்சர் ரயில் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை பயணிகள் வந்தபோது இன்ஜின் பொருத்தப்படாமல் பெட்டிகள் மட்டுமே நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டனர். அதற்கு, டீசல் இன்ஜின் இன்னும் வரவில்லை. அதனால், ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பயணிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில் நிலையத்திலேயே காத்து கிடந்தனர்.பின்னர், 7.20 மணியளவில் டீசல் இன்ஜின் பெட்டிகளுடன் பொருத்தப்பட்டு ரயில் அங்கிருந்து புறட்டு சென்றது. இதனால், அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் உட்பட பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: