கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் 7 இடங்களில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன. 23: தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் ஜாக்டோ ஜிேயா சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அரசுப் பணிகள் அடியோடு முடங்கியதோடு பல்வேறு பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் அவதிக்குள்ளாயினர்.   தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  சுப்பிரமணியன், தமிழக ஆசிரியர் கூட்டணி கணேசன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பவுல் ஆபிரகாம், பழனிச்சாமி, அரசு பணியாளர்கள் சங்கம் ரூஸ்வெல்ட், தமிழக தமிழாசிரியர் கழகம் ஆதி அருமை நாயகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் சிவன்  தலைமையில் ஆர்ப்பாட்டம்நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் குமாரவேல் பேசினார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கப் பிரதிநிதி செல்வின் அண்ணாமலை, பிரான்சிஸ் ஹென்றி, தமிழ்நாடு வணிவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பூசைத்துரை, கூட்டுறவுத்துறை அந்தோணிபட்டுராஜ், சேகர், துரை கந்தசாமி, சிவஞானம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என திரளானோர் பங்கேற்றனர். இன்றும், நாளையும் (23, 24) தாலுகா தலைநகரங்களில் மறியல் நடத்தவும், வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி:ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி கிளை சார்பில் மதிய உணவு இடைவேளையின்போது எஸ்.பி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மயில்குமார் தலைமை வகித்தார். இதில் செயலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் சேர்மதுரை, துணை தலைவர் முனியசாமி உள்ளிட்ட ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்  சங்க வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச்  செயலாளர் சகாயராஜ், தமிழ் ஆசிரியர்கள் சங்க வட்டாரச் செயலாளர் குமாரசாமி,  தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரச் செயலாளர் ஜான்சன்  தலைமை  வகித்தனர். ஜாக்டோ-ஜியோ  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கயத்தாறு கணேசன் விளக்கிப் பேசினார்.  தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க பிரதிநிதி உமாதேவி, தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதி ராமமூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செல்வராஜ், பட்டதாரி ஆசியர்  சங்கத்தின் பிச்சுமணி, உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சுந்தரராஜன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் முத்துமாரி,  சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதி செல்லத்துரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர்  சின்னத்தம்பி, மாவட்ட தணிக்கையாளர் முத்துசாமி, முன்னாள் பொதுச்செயலாளர்  ஜனகராஜ், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பார்த்தசாரதி  பேசினர். இதில்  கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு வட்டார அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று கோஷமிட்டனர்.திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜீவா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் வாவாஜி பக்கீர்முகைதீன் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கடலை வரவேற்றார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரார தலைவர் ஜார்ஜ்ராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டார செயலாளர் அன்றோ, மூட்டா யூனிட் டாக்டர் பசுங்கிளி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க சரவணன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நி லைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் குரூஸ்விக்பர்ட், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கப் பிரதிநிதி கிளாட்வின், டிஎன்பிஜிடிஏ திருச்செந்தூர் கல்வி மாவட்டாரத் தலைவர் அருள், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டார இணை செயலாளர் பிரின்ஸ், தமிழ்நாடு சத்துணைவு ஊழியர் சங்கம் மாவட்டார இணைச்செயலாளர் சேகர் என திரளானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார செயலாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்கள்  மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இருந்தபோதும் அரசுப் பணிகள் முடங்கின. இதே போல் சாத்தான்குளம்  ஒன்றியத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்ததால் பல்வேறு பள்ளிகள் இழுத்து மூடப்பட்டதால் மாணவர்கள் பலரும் கல்விகற்கமுடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனிடையே கோரிக்கைகளை  வலியுறுத்தி சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி தலைவர் அருள்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி  செயலாளர் அந்தோணிசார்லஸ், அரசு ஊழியர் சங்க வட்டாரச் செயலாளர் பொன்சேகர்    தலைமை வகித்துப் பேசினர். இதில் 200 பெண்கள் உள்ளிட்ட 270 பேர் பங்கேற்றனர். இன்றும் நாளையும் தொடர்ந்து இரு நாட்கள் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில்  மறியல்  போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம்:  ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க  வட்டாரத் தலைவர் கருப்பாசமி தலைமை வகித்தார். மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி கல்வி மாவட்டச்  செயலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு பட்டதாரி கழக மாவட்டத் தலைவர் மலையாண்டி,  தொழிற்கல்வி ஆசியர் சங்க மாநில பொறுப்பாளர் கள்ளவாண்டப்பெருமாள்,  சாலைப்பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் திருமாலை, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி  முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட மகளீரணி தலைவி மீனாட்சி உள்ளிட்ட  பலர் பேசினர். தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க வட்டாரச் செயலாளர் ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.

வைகுண்டம்: வைகுண்டம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரபிரபு தலைமை வகித்தார். இதர சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முருகன், மாரிகணேஷ், சுப்பிரமணியன், மேடையாண்டி, எபநேசர், பீர்முகமது பேசினர். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

விளாத்திகுளம்: இதேபோல் விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர். விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் துணைத் தலைவர் மூர்த்தி தலைமை வித்தாா். இதில் 115 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாளை காலை விளாத்திகுளம் ஜாக்டோ ஜியோ சாா்பில் பஸ்நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: