கண்சிகிச்சை உதவியாளர் பணியிடம் வேலைவாய்ப்பு பதிவைசரிபார்க்க அழைப்பு

கோவை,டிச.7: மருத்துவ துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு பதிவை சரிபார்த்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவபணியாளர் தேர்வு வாரியத்தால் 43 கண்சிகிச்சை உதவியாளருக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அளவில் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடம் மாநில மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்பட்ட கண்சிகிச்சை உதவியாளர் பட்டய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். ஒசி பிரிவினருக்கு மட்டும் அதிகபட்ச வயது 30 ஆகும், இதர பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. மேற்கண்ட வயது வரம்பு, கல்விதகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள், ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், பணீயில் இருக்கும் ராணுவத்தை சேர்ந்தோருக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன் கோவை வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘‘  26 ஆண்டிற்கு முன் உத்தரபிரதேசம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பாபர் மசூதி அதே இடத்தில் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியை இடித்தவர்கள் என சி.பி.ஐ அறிவித்த குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்கவேண்டும். இடிப்பு நாள் பாசிச எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது, ’’ என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க மாவட்ட தலைவர் அகமது கபீர், தலைமை கழக பேச்சாளர் செய்யது, ஜெம் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷம் எழுப்பினர். செஞ்சிலுவை சங்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

Related Stories: