கூத்தங்குடி கிராமத்தில் செயல்பாட்டுக்கு வந்த குடிநீர்தொட்டி

தா.பழூர் செப்.11: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கூத்தங்குடி கிராமத்தில் காலணி தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கூத்தங்குடி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கதொடடியில் பிரித்து கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லாத காரணத்தால் தனியாக போர் அமைத்து தொட்டி அமைக்கப்ட்டது. இப்பகுதி மக்களுக்கு இந்த இடத்தில் அமைந்துள்ள தொட்டிகள் இருந்து தண்ணீர் பெறுவது தான் வசதியாக இருந்தது ஆனால் கடந்த இரண்டு மாத காலமாக  தொட்டியும் மோட்டாரும் செயல்படாத நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தாதம்பேட்டை கிராமத்திற்கு சென்று குடி தண்ணீர் கொண்டு வந்து உபயோகப்படுத்தி  வருகின்றனர்.   

இந்த  டேங்க் செயல்படாத நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனு கொடுத்தும் ஊராட்சி செயலர் இடம் நேரில் சென்று தகவல் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல்  மின்மோட்டார் சுவிட்ச் பெட்டி  மின்சாரம் ஒயர்கள் அறுந்த நிலையில் வெளியில் தொங்கிக் கொண்டு மழையில் நனைந்தும் கிடந்தது. பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும் முன் அறுந்த ஒயர்களை சரிசெய்து பாதுகாப்பான முறையில் மோட்டார் சுவிட்ச் பெட்டி அமைத்துத் தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்ததை தொடர்ந்து மோட்டார் சரி செய்யப்பட்டு புதிய சுவிட்ச் பெட்டி மாற்றப்பட்டது.மகிழ்ச்சி அடைந்த மக்கள் ஊராட்சி அலுவலர் ,ஊராட்சி செயலர் மற்றும் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: