ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்களை பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா?…காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்களை பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னையில் பல இடங்களில் கிளை அமைத்து மசாஜ் சென்டருடன் அழகு நிலையம் நடத்தி வரும் தனி நபர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் மசாஜ் நிலையங்களை தொந்தரவு செய்ய கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் தாம்பரத்தில் உள்ள தங்கள் கிளையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வந்த போது தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். இதனை அடுத்து ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்களை பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பீர்களா என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தார். மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது எனவும் வலியுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். …

The post ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்களை பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா?…காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: