வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நர்சிங் மாணவி உட்பட 3 பெண்கள் கடத்தலா? வாலிபர்கள் மீது புகார்

வேலூர், ஆக.27: வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நர்சிங் மாணவி உட்பட 3 பெண்கள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ேவலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இன்டாஸ்கிராம் மூலம் ஒரு வாலிபருடன் அறிமுகமாகி, காதலித்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த 19ம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது பெற்றோர் அரியூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். புகாரில், தங்களது மகளை சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

வேலூர் அடுத்த அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கடந்த 24ம் தேதி வெளியே ெசல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அரியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை அதே பகுதியை சேர்ந்த திருக்குமரன் என்ற வாலிபர் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். மேற்கண்ட புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்கள் மற்றும் கடத்தியதாக கூறப்படும் வாலிபர்களை தேடி வருகின்றனர்.

அதேபோல் காட்பாடியை சேர்ந்தவர் 20 வயது நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த 24ம் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறி கல்லூரியில் இருந்து மாணவி வெளியே சென்றார். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோர் தரப்பில் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். புகாரில் வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த வாலிபர் விலாஸ்டின் என்பவர், தங்களது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி மற்றும் கடத்தியதாக கூறப்படும விலாஸ்டின் என்பவரையும் தேடி வருகின்றனர்.

The post வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நர்சிங் மாணவி உட்பட 3 பெண்கள் கடத்தலா? வாலிபர்கள் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: