விலை உயர்ந்தாலும் அலைஅலையாய் காசிமேட்டில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்தனர்

சென்னை: சென்னை காசிமேட்டில் விடுமுறை தினமான நேற்று மீன்கள் வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்தனர். விலை உயர்ந்தாலும் காலையிலேயே அலைஅலையாக வந்து வாங்கிச்சென்றனர். காசிமேட்டில் பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க ஏராளமானோர் வருவது வழக்கம். அதேபோன்று விடுமுறை நாளாக நேற்று காலையிலேயே அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்தனர். காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் காசிமேடு மீன் வளத்துறை அலுவலகத்தின் சார்பாக மொத்த வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 6 மணி வரை மீன்களை வாங்கி செல்வதற்கும், 6 மணி முதல் பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீனவ சங்கங்கள் அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.டீசல் விலை உயர்வு காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான விசைப்படகுகளே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பி வரும் நிலையில் மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனாலும், பொதுமக்கள் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாது போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர். குறிப்பாக, வஞ்சிரம் கிலோ ரூ.1000, பாறை ரூ.600, பெரிய வகை சங்கரா ரூ.800, டைகர் இறால் ரூ.1200, நண்டு ரூ.600 என விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post விலை உயர்ந்தாலும் அலைஅலையாய் காசிமேட்டில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: