வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய ரூ.1.80 லட்சம் அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

அண்ணாநகர்: சென்னை ஜெ.ஜெ.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு  இருந்த ரூ.1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக  பறிமுதல் செய்தனர்.சென்னை ஜெ.ஜெ.நகர், கலைவாணர் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவர், அதிமுக பிரமுகராக உள்ளார். இந்த பகுதியில் சர்மிளா சரவணன் என்பவர்  மாநகராட்சிக்குட்பட்ட 88வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். இவரது சார்பில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக, சாந்தியின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக, நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பிரமுகர் சாந்தியின் வீட்டுக்கு இரவு 11.30 மணியளவில் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன் தலைமையில், அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இச்சோதனையில், ரகசிய இடத்தில்  பதுக்கி வைத்திருந்த ரூ.1.80 லட்சம் சிக்கியது. அதை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, அதிமுக பிரமுகர் சாந்தியிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். …

The post வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய ரூ.1.80 லட்சம் அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: