போலீசாருக்கு மனவள புத்தாக்க பயிற்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் போலீசாருக்கு பெட்டிகுப்பம் ஊராட்சி சாமிரெட்டிகண்டிகை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மனவள புத்தாக்க பயிற்சி  நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமை தாங்கினார்.   மனவள புத்தாக்க பயிற்சியில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், பாதிரிவேடு காவல் நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள், கும்மிடிப்பூண்டி போக்குவரத்து காவல்  நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவலர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பிக்கள் முத்துசாமி, மீனாட்சி பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில்  வெளிச்சம் அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு சிறப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும், மருத்துவர் பிரேம்குமார் பங்கேற்று போலீசார் உடல் நலனை பராமரிப்பது, மன அழுத்தம் குறைக்க எளிய வழிகள், உணவு முறை குறித்து பேசினார். இறுதியாக  பேசிய டிஎஸ்பி ரமேஷ் கொரோனா காலத்தில் போலீசார் அதிகமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டாலும் அவைகளை மறந்து பணியில் உறுதியாக இருந்தால் பணி, குடும்பம்  இரண்டையும் பக்குவமாக கையாளலாம். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதால் மன அழுத்தம் குறையும், தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் பணி நேரத்தில்  மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என்றார். இதன் பின்னர் போலீசா பங்கேற்ற பாட்டு போட்டி,  நடன போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.

Related Stories: