வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே சூதாடிய 7 பேர் கைது; பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

 

மேட்டுப்பாளையம், ஆக.15: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் சூதாட்டம் நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திற்கு கிடைத்த தககவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்றனர். மண்டபம் அருகே உள்ள தனியார் நிலத்தில் சூதாடிய 7 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கோவை சவுரிபாளையம், உடையாம்பாளையம், காந்திமா நகர், கணபதி மாநகர் பகுதிகளைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (43), ஜெயபிரகாஷ் (42), லட்சுமணன் (41), மணிகண்டன் (28), ராஜா(29), நாகராஜ் (40), மகேஷ்குமார் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 700 பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் அடிக்கடி இதுபோன்று மண்டபங்களில் சூதாடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே சூதாடிய 7 பேர் கைது; பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.