வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் இன்று வலுப்பெறுகிறது

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது  வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, வால்பாறை பரம்பிக்குளம் பகுதியில் 20மிமீ மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக அந்தமான், கேரளப் பகுதிகளில் மழை பெய்து வருவதுடன் தமிழக-கேரள எல்லைப் ப குதியிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை 14ம் தேதி வரை பெய்யும். இதற்கிடையே, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு வங்கக் கடல் பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் இன்று வலுப்பெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: