ரூ.200 கோடிக்கு ரோடு பணிகள்: செட்டிங் டெண்டருக்கு எதிராக புகார்

 

கோவை, அக். 18: கோவை மற்றும் திருப்பூர் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கோவை திருப்பூர் ஈரோடு கரூர் மாவட்டங்களில் சென்டர் மீடியன், தடுப்பு சுவர், சிறு பாலம், மழை நீர் வடிகால் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய்க்கு 9 பேக்கேஜ்களாக திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 3 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படவுள்ளது.

ஆனால் டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே சிலருக்கு குறிப்பிட்ட பணிகளை முடிவு செய்து ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து செட்டிங் டெண்டர் நடைமுறை கூடாது. முறையாக விண்ணப்பங்கள் திறந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதிக்கக்கூடாது. ஒப்பந்த விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே ஃப்ரீ பிக்சிங் நடைமுறையை கொண்டு வருவது சரியல்ல. முறைகேடு நடந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு ஆவண ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.200 கோடிக்கு ரோடு பணிகள்: செட்டிங் டெண்டருக்கு எதிராக புகார் appeared first on Dinakaran.

Related Stories: