ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிய அரசு விருந்தினர் மளிகை: தேனியில் கட்டுமானப்பணி தீவிரம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலக பின்புறம் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிபில் புதிய அரசு விருந்தினர் மளிகை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசினர் விருந்தினர் மளிகை உள்ளது. மாவட்டத்திற்கு வரும் அமைச்சர்கள், நீதிபதிகள், துறை இயக்குநர்கள், செயலர்கள் என விஜபிக்கள் இந்த மளிகையில் தங்குவர். இந்நிலையில், அரசினர் மாளிகை சிறியதாக இருப்பதால், சில சமயங்களில் அரசு விருந்தினர்களுக்கு அறைகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கூடுதலாக அரசினர் விருந்தினர் மாளிகை கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு, பொதுப்பணித்துறை (கட்டிடம்) மூலமாக தற்போதுள்ள விருந்தினர் மாளிகை அருகே புதியதாக விருந்தினர் மாளிகை கட்ட திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.2 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, இதற்கான கட்டுமானப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதிய விருந்தினர் மாளிகையில் தரைத்தளம் 2,900 சதுரஅடி, முதல்தளம் 2,900 அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. கட்டுமானப்பணிகளை வருகிற 2022 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. இதேபோல, கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள காலியிடத்தில் சுமார் 7 ஆயிரத்து 240 சதுரஅடி பரப்பளவில் 300 பேர் அமரும் வகையிலான கூட்ட அறை ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.என்னென்ன வசதிகள்…புதிய விருந்தினர் மாளிகையில் தரைத்தளத்தில் 2 விஐபி சூட் எனப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அறைகளும், 2 அனைத்து வசதிகளுடன் கூடிய 2 சாதாரண அறைகளும் கட்டப்படுகின்றன. இதேபோல முதல்தளத்திலும் தரைத்தளத்திலும் உள்ளது போலவே 2 விஐபி அறைகளும், 2 சாதாரண அறைகளும் கட்டப்படுகின்றன. இதுதவிர வரவேற்பு அறை, சமையல் அறை, உணவு அருந்தும் கூடம், போர்டிகோ என சகல வசதிகளுடன் கூடியதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது….

The post ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிய அரசு விருந்தினர் மளிகை: தேனியில் கட்டுமானப்பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: