மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம்

சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தாக்கல் செய்யவுள்ளார். இந்த சட்டத்திருத்த மசோதாவில், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.இதனிடையே, மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த மசோதாவை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர், ஆண்டிபட்டி, மன்னார்குடி, கோபி, மணப்பாறையில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம் நடத்தி வருகினறனர். மேலும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. …

The post மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: