மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்சில் பிரைடல் நகை கண்காட்சி

சென்னை: உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை தி.நகர்  மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன ஷோரூமில் நடக்கிறது. இதில் மதிப்புமிக்க மற்றும் தனித்துவமான மணப்பெண்ணுக்கான தங்கம், வைரம், பிளாட்டினம் நகை கலெக்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சியில் கடந்த 21ம் தேதி தீபிகா படுகோனின் திருமண தென்னிந்திய வரவேற்பு தோற்றம், அனுஷ்கா ஷர்மா, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோர் திருமண தோற்றத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில மணப்பெண்கள், அவர்களது கலாச்சார நகைகளை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு காட்சியளித்தனர்.பேப்வென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு, சென்னையை சேர்ந்த டிசைனர் ரூபீனா அப்ரோஸ், தீபக் பட்டு புடவைகள் (பாரம்பரிய நெசவாளர்கள்) ஆடை அலங்காரம் செய்யப்பட்டது. 22ம் தேதி சென்னையை சேர்ந்த ருபீனா அப்ரோஸின் ஆடைகள், புடவைகளின் காட்சி பெட்டி, காஞ்சிபுரத்தை சேர்ந்த தீபக் பட்டுப் புடவைகளில் இருந்து 2 பேரும் தங்களது பெருநாளுக்கான திருமண உடைகள் மற்றும் நகைகளுடன் கூடிய ஸ்டைலிங் டிப்ஸ்கள் குறித்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினர். 28ம்  தேதி நிருத்யாஞ்சலி வெளியீடு மூலம் நன்கு அறியப்பட்ட மூத்த பாரம்பரிய நடன கலைஞர்களான சாந்தா தனஞ்செயன், தனஞ்செயன் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது….

The post மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்சில் பிரைடல் நகை கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: