மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதி 3 மணி நேரம் காரில் காத்திருந்து மூச்சுத் திணறி உயிரிழந்த பெண்: ஆயிரம் வசதி, உறவுகள் இருந்தும் அனாதையாக போன பரிதாபம்

புதுடெல்லி:கொரோனா 2வது அலை நாட்டில் பல இன்னல்கள், சிரமங்கள், சோகங்கள், வேதனைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆங்காங்கு நடக்கும் பல துயர சம்பவங்கள் மனதை பதைபதைக்க செய்கின்றன. கண்களை கலங்க வைக்கின்றன.  உத்தரப் பிரதேசத்தில் இறந்த மனைவியின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட யாரும் உதவ வராத நிலையில், முதியவர் ஒருவர் மனைவியின் சடலத்தை சைக்கிளில் தள்ளி சென்ற புகைப்படம் வைரலானது. ஏழை மக்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. படித்தவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் கூட இதே நிலையைதான். ஆக்சிஜன் இன்றி பல உயிர்களும், படுக்கை வசதி கிடைக்காததால் பல உயிர்களும் கொரோனாவின் கொடூரத்துக்கு பலியாகி வருகின்றன.  உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த பெண் ஜாக்ரிதி குப்தா (35). பொறியாளராக வேலை செய்து வந்தார். தனியாக வசித்து வந்தார். அவரின் கணவரும், 2 குழந்தைகளும் மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றனர். பணி நிமித்தமாக, பணம் சம்பாதிக்கும் ஆசையில் குடும்பத்தை விட்டு இங்கே வந்து, தனியாக தங்கி வேலை செய்தார். வசதிக்கும் குறை இல்லாதவர். இந்நிலையில், ஜாக்ரிதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், நொய்டாவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு தனியாக காரில் சென்றார். ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கு படுக்கை வசதி இல்லை. மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால், தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் மன்றாடினார். ஆனால், படுக்கை இல்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதனால், 3 மணி நேரம் வரை காரிலேயே காத்திருந்தார். அவருடன் யாருமே இல்லை. பிற்பகல் 3.30 மணிக்கு கடுமையான மூச்சுதிணறல் ஏற்பட்டது. அருகில் இருந்து இதை பார்த்தவர்கள், மருத்துவமனைக்கு உள்ளே சென்று உதவும்படி வேண்டினர். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் வந்து பார்த்த்போது, அவர் இறந்து போயிருந்தார். பணம், பொருள், குடும்பம் இருந்தும், தனியாக வாழ்ந்த அவர், அனாதையாக உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது….

The post மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதி 3 மணி நேரம் காரில் காத்திருந்து மூச்சுத் திணறி உயிரிழந்த பெண்: ஆயிரம் வசதி, உறவுகள் இருந்தும் அனாதையாக போன பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: